search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபநாசம் அணை"

    • இன்று காலை வரை பாபநாசத்தில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • சேர்வலாறு அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துவிட்டது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய அளவை விட இன்று சுமார் 2 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை வரை பாபநாசத்தில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 120.27 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பெய்து வந்த மழையால் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே ராமநதி, கடனா அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 128.50 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்று 130.25 அடியாக உயர்ந்துள்ளது.

    குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

    • குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
    • குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அணை பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் சுமார் 35 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் 98 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 101.50 அடியை எட்டியது.

    சேர்வலாறு அணையில் 123.10 அடியும், மணிமுத்தாறு அணையில் 75.30 அடியும் நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் அதிகபட்சமாக 34 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 28 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்மழையால் மாவட்டத்தில் நீர்நிலைகள், குளங்கள், கிணறுகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கார் பருவ சாகுபடி பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை, 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்ட 2 அடியே தேவைப்படுகிறது. எனினும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    கருப்பாநதி அணை பகுதியில் 43 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை நீர்பிடிப்பு பகுதியில் 19 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதி அணை 4 அடி உயர்ந்து 61.35 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 121.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது.
    • பாபநாசம் அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை பெய்து வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 84 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்து 91.60 அடியாக உள்ளது. அணைக்கு 6,921.99 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக தொடர்மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 25 அடி உயர்ந்துள்ளது.

    மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. தற்போது நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இதேபோல் முழு கொள்ளளவு 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 11 அடி உயர்ந்து 128.84 அடியை எட்டி உள்ளது. கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் 78.80 அடியில் இருந்து சுமார் 50 அடி உயர்ந்து 128.84 அடியை எட்டியுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டரும், பாபநாசதத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க இன்றும் தடை நீடிக்கிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 82 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு 3 அடி நீரே தேவை. இன்று காலை நிலவரப்படி அணை பகுதியில் 50 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அடவிநயினார் அணை பகுதியில் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 112 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 48.89 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை பகுதியில் 62 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் பரவலாக மழை பெய்தது.

    • தென்காசி மாவட்ட அணைப்பகுதியில் சாரல் மழை பெய்தது.
    • குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முதல் நெல்லை மாவட்ட பகுதியில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நேற்று விநாடிக்கு 1703 கனஅடியாக தண்ணீர் வரத்து இருந்தது. ஆனால் இன்று மழை இல்லாததால் தண்ணீர் வரத்து 1159 கனஅடியாக குறைந்தது. எனினும் அணையில் இருந்து பாசனத்திற்காக 1004.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    மணிமுத்தாறு அணைக்கு நேற்று 200 கனஅடி தண்ணீர் வந்தநிலையில் தற்போது 164 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணைக்கு 318 கனஅடி தண்ணீர் வருகிறது.

    143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் இன்று 71.85 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 84.78 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.45 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்ட அணைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. சுற்றுலாப்பயணிகள் கூட்டமும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

    தென்காசி மாவட்ட மலைப்பகுதியில் பெய்த லேசான மழை காரணமாக அணைகளுக்கும் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதியின் நீர்மட்டம் இன்று 80.25 அடியாக இருந்தது.

    இதேபோல் குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 87.75 அடியாக உள்ளது.

    பாபநாசம் அணை வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
    நெல்லை:

    நெல்லையில் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்த தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையொட்டி கடனா உள்ளிட்ட ஒருசில அணைகளை நாளை (வெள்ளிக்கிழமை) பாசனத்துக்கு திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதே போல் பாபநாசம் அணையில் இருந்து வருகிற 24-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தூத்துக்குடியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். அரசியலுக்காக சிலர் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்போவதாக கூறிவருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு குடிநீர், மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த ஆலையை ஒரு போதும் திறக்கவே முடியாது. தற்போது அங்கிருந்து கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது. அங்குள்ள மற்ற கழிவுகள் உள்ளிட்ட பொருட்களும் முழுமையாக அகற்றப்படும்.

    சேலம் -சென்னை 8 வழிச்சாலை மக்களின் விருப்பப்படி அமைக்கப்படுகிறது. அந்த சாலை மிகவும் அவசியமானது ஆகும். அது தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

    ×